தொழில்நுட்பம்
கேலக்ஸி இசட் ப்ளிப்

புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2021-01-02 06:03 GMT   |   Update On 2021-01-02 06:03 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது.


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

புதிய ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் F700FxXx3CTLx எனும் பர்ம்வேர் வெர்ஷன் கொண்டிருக்கிறது. அளவில் இது 2,014.37MB ஆக இருக்கிறது. தற்சமயம் இந்த அப்டேட் ஆசியா, ஐரோப்பியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் வழங்கப்படுகிறது.



புது அப்டேட் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.0 சார்ந்த அம்சங்களை கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு வழங்குகிறது. இதில் மேம்பட்ட யுஐ டிசைன், சிறப்பான அனிமேஷன், சாட் பபிள்கள், மேம்பட்ட ஸ்டாக் ஆப், லாக் ஸ்கிரீன் விட்ஜெட்கள், மேம்பட்ட செக்யூரிட்டி மற்றும் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் புதிய பிரைவசி கண்ட்ரோல்கள், ஒன்-டைம் பர்மிஷன்கள், மேம்பட்ட டிஜிட்டல் வெல்பீயிங் அம்சங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்யுஐ 3.0 அப்டேட் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி எம்31 மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News