ஆட்டோமொபைல்
ஜீப் ராங்ளர் ரூபிகான்

இந்தியாவில் ஜீப் ராங்ளர் ரூபிகான் அறிமுகம்

Published On 2020-03-04 09:12 GMT   |   Update On 2020-03-04 09:12 GMT
ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



ஜீப் நிறுவனம் இந்தியாவில் புதிய ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் ராங்ளர் ரூபிகான் மாடலின் துவக்க விலை ரூ. 64.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஜீப் ராங்ளர் ரூபிகான் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வருவதாக ஜீப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜீப் ராங்ளர் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான விநியோகம் மார்ச் 15-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.



உலக சந்தையில் முன்னணி ஆஃப் ரோடர் மாடல்களில் ஒன்றாக ஜீப் ராங்ளர் ரூபிகான் இருக்கிறது. ஜீப் ராங்ளர் ரூபிகான் மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த என்ஜின் தவிர ஜீப் ராங்ளர் ரூபிகான் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது. இதில் ஏர்பேக், பார்க் அசிஸ்ட் சிஸ்டம், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டிரெயிலர் ஸ்வே கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News