வழிபாடு
ஆண்டிபட்டி அருகே கதலி நரசிங்கபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா

ஆண்டிபட்டி அருகே கதலி நரசிங்கபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2022-04-09 03:24 GMT   |   Update On 2022-04-09 03:24 GMT
ஒவ்வொரு நாளும் சுவாமி அன்னவாகனம், சிம்ம வாகனம், ஆஞசநேயர், கருடன், ஆதிஷேசன், கஜேந்திர வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலி-புத்தூரில் பழமை-யான கதலி நரசிங்க-பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திரு-விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடை-பெற்று உற்சவ மூர்த்தி-களுக்கு அபிசேகமும், தீபாராதனையும் காட்டப்-பட்டது.

இதனையடுத்து சக்கரத்-தாழ்வார் எதிர் சேவை செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து கொடி-மரத்திற்கு பூஜை செய்யப் பட்டு 18 பட்டி கிராமத்தார் முன்னி-லையில் கொடி ஏற்றப்பட்டது.
 
இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சுவாமி அன்னவாகனம், சிம்ம வாகனம், ஆஞசநேயர், கருடன், ஆதிஷேசன், கஜேந்திர வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் 14 ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதலி நரசிங்க பெருமாளுக்கு திருக்-கல்யாணம் நடைபெறும்.
 
அதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி உற்சவர்கள் தேரில் எழுந்தருளி தேர்-திருவிழா நடைபெறும். 17 மற்றும் 18 ஆம் தேதி 2 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் ஊர் சுற்றி வந்து நிலை நிறுத்தப்படும். 19 தேதி சப்தா வர்ணம் சாத்தப்பட்டு விழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகளை தக்கார்வைரவன், செயல் அலுவலர் தங்க லதா தலைமையில் 18 கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News