தொழில்நுட்பம்
ரியல்மி ஜிடி

ரியல்மியின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2021-02-18 11:39 GMT   |   Update On 2021-02-18 11:39 GMT
ரியல்மி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனை மார்ச் 4 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இது அந்நிறுவனம் ரேஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கி வந்த ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல் ஆகும். 

புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்து உள்ளது.



ரியல்மி ஜிடி மாடல் ஜிடி ஸ்போர்ட்ஸ் கார்களை தழுவிய கான்செப்ட் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார்கள் அதிவேகமாக நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் அதிக செயல்திறன் மற்றும் நம்பத்தகுந்த அம்சங்களை வழங்கும். ரியல்மி ஜிடி பிளாக்ஷிப் மாடல் இளம் பயனர்களை கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பின்புறம் ஜிடி பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டு உள்ளது. இத்துடன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 64 எம்பி மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
Tags:    

Similar News