செய்திகள்

214 ரன் அடித்தும் இமாலய இலக்கை எட்ட முடியாமல் பரிதாபமாக தோல்வியடைந்தது பஞ்சாப்

Published On 2018-05-12 14:23 GMT   |   Update On 2018-05-12 15:18 GMT
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடித்த 246 ரன் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. #IPL2018 #KXIPvKKR
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன் (75), தினேஷ் கார்த்திக் (50), அந்த்ரே ரஸல் (31) ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

பின்னர் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

கேஎல் ராகுல் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, கிறிஸ் கெய்ல் திணறினார். பஞ்சாப் அணியின் ஸ்கோர் 5.4 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது கெய்ல் 21 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தடைபோட்டார் அந்த்ரே ரஸல்.



மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேஎல் ராகுல் 29 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலம், அக்சார் பட்டேல் 19 ரன்னிலும், பிஞ்ச் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - அன்ட்ரிவ் டை பஞ்சாப் அணியின் ஸ்கோரை 200 ரன்னைத் தாண்டி இழுத்துச் சென்றனர். கடைசி ஓவரில் டை (14), அஸ்வின் (45) ஆட்டமிழக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News