செய்திகள்
மான் கறி விற்றவர்கள் கைது

வேப்பந்தட்டை அருகே மான் கறி விற்ற 2 பேர் கைது

Published On 2021-07-21 09:27 GMT   |   Update On 2021-07-21 09:27 GMT
மான்கள் அடிக்கடி சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த எறையூர் சர்க்கரை ஆலை அருகே அமைந்துள்ளது நரிக்குறவர் காலனி. இதையொட்டிய வனப்பகுதி மற்றும் காப்புக்காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் மான்கள் அடிக்கடி சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் புவனேஸ்வரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் எறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37), மாவீரன் (33) ஆகிய இருவரும் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பதற்காக தயார் நிலையில் வைத்திருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்ததோடு, இருவருக்கும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

Tags:    

Similar News