லைஃப்ஸ்டைல்
உடைகளுக்கு ஏற்ற காலணிகளை அணி விரும்பும் பெண்கள்

உடைகளுக்கு ஏற்ற காலணிகளை அணி விரும்பும் பெண்கள்

Published On 2021-06-04 04:28 GMT   |   Update On 2021-06-04 04:28 GMT
பெண்களுக்கு செருப்பின் மீதான ஆவல் சிறு வயதில் அவர்கள் கேட்ட சிண்ட்ரெல்லா கதை முதலே ஆரம்பித்து விடுகிறது. இந்த காலத்து சிண்ட்ரெல்லாக்கள் அணியும் காலணி வகைகள் பற்றியே இந்த தொகுப்பு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு செருப்பின் மீதான ஆவல் சிறு வயதில் அவர்கள் கேட்ட சிண்ட்ரெல்லா கதை முதலே ஆரம்பித்து விடுகிறது. அதிலும் உடைகளுக்கு தகுந்தவாறு செருப்பு அணியும் பழக்கம், இந்திய பெண்களிடம் உள்ளது. இந்த காலத்து சிண்ட்ரெல்லாக்கள் அணியும் காலணி வகைகள் பற்றியே இந்த தொகுப்பு தெரிவிக்கிறது.

இரண்டு பட்டை செருப்பு( டபுள் ஸ்ட்ராப் சான்டல்ஸ்)

அன்றாடம் பயன்படுத்தும் இந்த செருப்பின் வகையே அனைத்து உடைகளுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும். அவற்றின் எளிய வடிவம் காரணமாக அணிவதற்கு சுலபமாகவும், சவுகரியமாகவும் இருக்கும்.

ஸ்னிக்கர்ஸ்

மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட காலசாரத்தில் இந்த வகை காலணிகளை அணிவதும் ஒன்று. பெரும்பாலும் மேற்கத்திய நாகரிக உடைகளுக்கே இவை பொருத்தமாக இருக்கும்.

பிளாக் ஹீல்ஸ்

சிறிய சதுரம் போன்ற வடிவம் கொண்ட ஹீல்ஸ் என்ற காரணத்தினால் இந்த வகை காலணிகள் பிளாக் ஹீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை ஃபார்மல் மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

பிளாட்பாரம் ஹீல்ஸ்

இவ்வகை காலணிகள் 1990 ஆண்டில் சினிமா கதாநாயகிகளின் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவற்றை ஐஸ்வர்யா ராய் முதல் நமது ஊர் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை  அணியாத நடிகைகளே இல்லை. அனைத்து வகையான உடைகளுக்கும் எடுப்பாக இருக்கும்.

பீப் டோ ஹீல்ஸ்

பாயின்ட் ஹீல்ஸ் வகையில் கால் விரல்கள் வெளியில் தெரியும் வகையில் இருப்பதே பீப் டோ ஹீல்ஸின் தனித்துவமான வடிவமைப்பாகும். பெரும்பாலும் பென்சில் கட் பேண்ட், ஸ்கர்ட் மற்றும் ஜம்சூட் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

வெட்ஜஸ்

இத்தாலியில் 1930-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு 1980-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த காலணி வகை வெட்ஜஸ் ஆகும். ஒரே விதமான மூலப்பொருளை கொண்டு தயார் செய்யப்படுகின்றன. பலாசோ, ஜீன்ஸ போன்ற உடைகளுக்கு இவை பொருத்தமாக இருக்கும்.

ஜூட்டிஸ்

ஜூட்டிஸ் மிகவும் பழமை வாய்ந்தது. இவை நமது பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

படுகாஸ்

நாகரீகம் வளர்ந்த நிலையில் இந்தியாவில் இவ்வகை மாடல் உருவாக்கப்பட்டது. இவ்வகை காலணிகள் சேலை, சல்வார் என பாரம்பரிய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
Tags:    

Similar News