செய்திகள்
கே.சி.பழனிச்சாமி

சேரன் ஹோல்டிங்ஸ் வழக்கில் இருந்து கே.சி.பழனிசாமி விடுதலை

Published On 2019-09-18 09:58 GMT   |   Update On 2019-09-18 09:58 GMT
பொருளாதார குற்றப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி,  சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த, 'சேரன் ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 2004-05ல் பதவி வகித்தார். அந்த நிறுவனத்தை பதிவு செய்ததற்கான ஆவணங்களை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கம்பெனிகள் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், பழனிசாமி உரிய ஆவணங்களுடன், பதிவாளர் முன் ஆஜராகவில்லை.

இதனால், பழனிசாமிக்கு எதிராக, கம்பெனி பதிவாளர் சார்பில் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி.,  எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி டி.லிங்கேஸ்வரன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டபோது அதில் கே.சி.பழனிச்சாமி இயக்குநராக இல்லாதது நிரூபிக்கப்பட்டதால், அவரை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
Tags:    

Similar News