செய்திகள்
நிதின் கட்காரி- மு.க.ஸ்டாலின்

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா- விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2020-09-17 06:05 GMT   |   Update On 2020-09-17 06:05 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி விரைவில் குணமடைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, மாநில முதல் மந்திரிகள், மந்திரிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய மந்திரிகள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி கட்காரி விரைவில் குணமடைய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு நல்ல ஆரோக்கியத்திற்கு திரும்ப வேண்டும் என ஸ்டாலின் கூறி உள்ளார்.
Tags:    

Similar News