உள்ளூர் செய்திகள்
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

பேட்டை மேல்நிலைப்பள்ளியில் கிராம உதயம் சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-05-05 10:09 GMT   |   Update On 2022-05-05 10:09 GMT
நெல்லை மாவட்ட நிர்வாகம், நெல்லை மாநகராட்சி மற்றும் கிராம உதயம் கோபாலசமுத்திரம் இணைந்து பேட்டை காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் 500 மரக்கன்றுகள் வழங்கி நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை மாவட்ட நிர்வாகம்,  நெல்லை மாநகராட்சி மற்றும் கிராம உதயம் கோபாலசமுத்திரம் இணைந்து பேட்டை காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் 500 மரக்கன்றுகள் வழங்கி நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

 சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

துப்புரவு பணி மேற்பார்வையாளர் பெருமாள், தூய்மை இந்தியா பரப்புரையாளர் வேல்முருகன், காமராஜர் நகர்மன்ற  மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் செல்வராணி, அங்கன்வாடி பணியாளர் வள்ளியம்மாள், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் செய்து இருந்தார்.
Tags:    

Similar News