செய்திகள்
கோப்பு படம்

விதிகளை மீறி கடைகளின் பெயர் பலகை- அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

Published On 2021-07-16 08:47 GMT   |   Update On 2021-07-16 08:47 GMT
துறை ரீதியான அதிகாரிகளும் பிற மொழி பெயர்ப்பலகை வைத்துள்ள வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் கிடையாது.
உடுமலை:

துறை ரீதியான அதிகாரிகளும் பிற மொழி பெயர்ப்பலகை வைத்துள்ள வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் கிடையாது. 

வணிக நிறுவன சட்டப்படி தமிழக வணிக நிறுவனங்களில் நிறுவனத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால்  5:3:2 என்ற அளவில் முறையே தமிழ், ஆங்கிலம், பிறமொழியில் பெயர்கள் இடம்பெற செய்ய வேண்டும். அவை ஒரே பலகையில் சீர்திருத்த எழுத்து வடிவில் இடம் பெற வேண்டும் என தமிழக வணிக நிறுவன சட்டமும் வரையறுத்துள்ளது. ஆனால் உடுமலை நகரில்  பெரும்பாலான கடைகளில்  இவ்விதிகள் சரிவர பின்பற்றப்படாமல் உள்ளது. தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற வணிக நிறுவன சட்டத்தை நிறைவேற்றுவதில்  சில கடை உரிமையாளர்கள் மெத்தனமாக உள்ளனர்.துறை ரீதியான அதிகாரிகளும்  பிற மொழி பெயர்ப்பலகை வைத்துள்ள வணிக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பதும் கிடையாது.

இது ஒருபுறமிருக்க  கடைகளின் பெயர்ப்பலகை அளவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையில்  பெரிய அளவில்காணப்படுகின்றன. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்,கோர்ட் உத்தரவுப்படிவணிகநிறுவனங்களில் பெயர்ப்பலகைஅமைக்கப்படுவதில்லை. இவை உரிய முறையில் உள்ளதா என தமிழ் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News