செய்திகள்
சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர்

டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Published On 2021-09-11 07:17 GMT   |   Update On 2021-09-11 07:52 GMT
டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது என்றும் இது இன்னும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லியில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு பெய்து வரும் பருவமழையில் 1000 மி.மீ. அளவைத் தாண்டியது இதுவே முதல் முறை. இது கடந்த 11 ஆண்டுகளில் டெல்லியில் அதிகபட்ச மழையாகவும் பதிவாகி உள்ளது.

டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-

டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இது இன்னும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும்.



குறிப்பாக டெல்லியில் தேசிய தலைநகர் பகுதிகளான பகதூர்கர், குருகிராம், மனேசர், பரீசதாபாத், நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஒரு சில இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யும்.

அடுத்த 12 மணி நேரத்தில் டெல்லியில் 2 செ.மீ. அளவில் லேசானது முதல் மிதமான மழையும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 3-5 செ.மீ. அளவில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News