செய்திகள்
மினி பஸ்

மெட்ரோ பயணிகளின் வசதிக்காக 12 மினி பஸ்கள் விரைவில் இயக்கம்

Published On 2021-10-19 06:48 GMT   |   Update On 2021-10-19 08:36 GMT
கடந்த ஆட்சி காலத்தில் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படாமல் இருந்த மினி பஸ்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

சென்னையில் மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடந்த சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 மினி பஸ்களில் 66 மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் மினி பஸ் பயணிகளின் பயன்பாடு குறைந்து, நிதி இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 மினி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த மினி பஸ்களை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, முதல் கட்டமாக 12 மினி பஸ்கள் இம்மாதத்தில் இயக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம், சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆட்சி காலத்தில் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படாமல் இருந்த மினி பஸ்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News