செய்திகள்
விமான சேவை

இந்தியா- வங்காளதேசம் இடையே செப்டம்பர் 3ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை

Published On 2021-08-28 17:05 GMT   |   Update On 2021-08-28 17:05 GMT
ஏர் பபிள் எனப்படும் சிறப்பு ஒப்பந்தம் மூலம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு நாடுகள் இடையே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏர் பபிள் எனப்படும் சிறப்பு ஒப்பந்தம் மூலம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு நாடுகள் இடையே விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில், ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் முதல் ‘ஏர் பபிள்’ திட்டம் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா 2வது அலை அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-வங்காளதேசம் இடையிலான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இரு நாடுகள் இடையே ஏர் பபிள் ஒப்பந்தத்தின்கீழ் விமான சேவை தொடங்க உள்ளது. இந்தியா-வங்காளதேசம் இடையே செப்டம்பர் 3ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News