தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 லைட் புதிய ரென்டர்கள்

Published On 2019-12-19 08:08 GMT   |   Update On 2019-12-19 08:08 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இதுவரை வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பன்ச் ஹோல் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க கிட்டத்தட்ட கேலக்ஸி எஸ்10இ போன்று காட்சியளிக்கிறது. மேலும், புது ஸ்மார்ட்போனில் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களை போன்று சதுரங்க கேமரா பம்ப் கொண்டிருக்கிறது.



இதேபோன்ற வடிவமைப்பு அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவற்றில் 3D கிளாஸ்டிக் ஃபினிஷ், மெட்டல் ஃபிரேம், பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

புதிய ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் ஆரா குளோ நிறங்களில் உருவாகி இருக்கிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனிலும் எஸ் பென் வசதி, ப்ளூடூத் 5.1 வசதி, லொகேஷன் டிராக்கிங் அம்சத்துடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை 650 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 51,420) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: winfuture
Tags:    

Similar News