தொழில்நுட்பம்
பேஸ்புக்

தீபாவளிக்கு புது அம்சங்களை அறிமுகம் செய்த பேஸ்புக்

Published On 2020-11-13 06:24 GMT   |   Update On 2020-11-13 06:24 GMT
பேஸ்புக் தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் விர்ச்சுவல் முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது. இதில் பயனர்கள் தங்களது உறவினர்களுக்கு பிரத்யேக வாழ்த்துகளை தீபாவளி ரெடி அவதார்களாக அனுப்பலாம்.

இத்துடன் பயனர்கள் தன் வீட்டில் எவ்வாறு தீபாவளியை கொண்டாடினர் என்பதை விளக்கும் புகைப்படம் அல்லது விளக்கேற்றும் வீடியோக்களை படமாக்கி அதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 



பின் அவர்களையும் இதே போன்று செய்ய டேக் செய்து சவால் விட முடியும். இவ்வாறு செய்பவர்கள் #DiwaliAtHomeChallenge எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம். 

பயனர் எதிர்கொள்ளும் சவால்களை ஏற்று அதனை தங்களது நியூஸ் பீடில் பகிர்ந்து கொண்டு மற்றவர்களை அதில் டேக் செய்து அவர்களையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தலாம். 

வழக்கமான தீபாவளி பதிவுகளின் பின்னணியில் தீபாவளி தீம் கொண்ட அவதார்களை இணைத்து கொள்ளலாம். இந்த அம்சம் பேஸ்புக் மொபைல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளில் பயன்படுத்த முடியும்.
Tags:    

Similar News