செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி

Published On 2019-11-11 05:10 GMT   |   Update On 2019-11-11 07:08 GMT
உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தருமபுரி:

உயர்கல்வித்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன்-மல்லிகா அன்பழகன் ஆகியோரின் மகன் என்ஜினீயர் சசிமோகன், சென்னையை சேர்ந்த மனோகரன்-குமுதா ஆகியோரின் மகள் பூர்ணிமா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளி கிராமத்தில் தானப்பகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

சிறந்த நிர்வாகம் காரணமாக இந்தியாவிலேயே தமிழகம்தான் உயர்கல்வி பயில்வோர் 49 சதவிகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. இது, உயர்கல்வியில் ஒரு சகாப்தம். வரலாறு படைக்கப்பட்டு உள்ளது. மேலும், தருமபுரி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் நிரூபித்து உள்ளார்.

கட்சியினரையும், கூட்டணிக் கட்சியினரையும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியை அளித்ததற்கு அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இதுஒரு மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமையை மக்கள் மன்றத்தில் நிரூபித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News