ஆன்மிகம்
த்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி(பழைய படம்)

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி

Published On 2020-10-14 06:33 GMT   |   Update On 2020-10-14 06:33 GMT
பாரம்பரிய மாக நடைபெறும் திருவி தாங்கூர் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் காலை 7.35 மணிக்கு நடைபெற்றது.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு அந்த விழாவில் கலந்து கொள்வதற் காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

நவராத்திரி விழா நாட்களில் அங்கு சாமி சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படும். விழா முடிவடைந்ததும் மீண் டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பாரம் பரியமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகளை தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்லாமல், வாகனத்தில் கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாரம்பரிய முறைப்படி தான், சாமி சிலைகளை திருவனந்தபுரம் கொண்டு செல்ல வேண்டும் என பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.

பலஇடங்களில் போராட்டங்களும் நடந்தன. இதைத் தொடர்ந்து தமிழக மற்றும் கேரள அரசுகள் காணொலி காட்சி மூலம் பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சாமி சிலைகள் ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படியே நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கேரள போலீசாருக்கு பங்கேற்க அனுமதியில் லாத தால் தமிழக போலீசார் மட்டும் பங்கேற்று துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

அம்மன் சிலை ஊர்வலம் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று மாலை பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்றடைந்தது. இதே போல் குமாரகோவில் வேளிமலை முருகன் சுவாமி சிலை ஊர்வலம் இன்று (14-ந்தேதி) அதிகாலை 5மணிக்கு புறப் பட்டு பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தடைந்தது.

இதையடுத்து பாரம்பரிய மாக நடைபெறும் திருவி தாங்கூர் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் காலை 7.35 மணிக்கு நடைபெற்றது. அரண்மனை உப்பிரிகை மாளிகையில் பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னரின் உடை வாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார், கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனிடம் வழங்கினார்.

அவர், அதனை குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் அன்புமணியிடம் வழங்கினார். அவரிடமிருந்து தேவசம்போர்டு ஊழியர் மோகனகுமார் உடைவாளை பெற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், இந்து அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து உடைவாள் சரஸ்வதி அம்மன் சிலை, முன்னுதித்த நங்கை அம்மன் சிலை, முருகன் சாமி சிலை ஆகியவை வைக்கப்பட்டிருந்த இடத் திற்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது.

அவை பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன் கொண்டு வரப்பட்டது. அங்கு பத்மநாபபுரம் அரண்மனை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் அரண்மனை கண்காணிப்பாளர் அஜித் குமார் முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டு பிடி காணிக்கை வழங்கப்பட்டது.

அதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் சரண்யா அறி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்பு காலை 8.40 மணியள வில் 3 சாமி சிலை களும் குழித்துறை மகாதேவர் கோவிலுக்கு பல்லக்கில் புறப்பட்டது. கேரளபுரம் வழியாக திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் சென்று குழித்துறை மகா தேவர் கோவிலில் இரவில் தங்கு கிறது.

நாளை காலை குழித்துறை யில் இருந்து புறப்பட்டு களியக்காவிளைக்கு சாமி சிலைகள் ஊர்வலம் செல்கிறது. அங்கு சார்பில் கேரள மாநிலம் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் அன்றிரவு நெய்யாற்றின் கரையில் தங்கி விட்டு 16-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவி லுக்கு ஊர்வலம் சென்றடைகிறது.

அதன் பிறகு நவராத்திரி விழா பூஜையில் 10 நாட்கள் 3 சாமி சிலைகளும் வைக்கப்படும். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை திருவனந்தபுரம் கோட்டை ககம் உள்ளே உள்ள நவராத்திரி கொலு மண்டபத்திலும், வேளிமலை முருகன் சாமி சிலை அரியாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்ட அம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடக் கிறது.

நவராத்திரி பூஜைகள் முடிந்ததும் 3 சாமி சிலை களும் 27-ந்தேதி குமரி மாவட் டத்திற்கு புறப்படுகிறது. சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு 30-ந்தேதி வருகிறது.
Tags:    

Similar News