செய்திகள்
கொள்ளை

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் நகை திருடிய கும்பல்

Published On 2021-07-22 10:00 GMT   |   Update On 2021-07-22 10:00 GMT
ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை அடுத்த மேல்அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 20).

சம்பவத்தன்று ஏழுமலை தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். பின்னர் அவர் சென்னையில் இருந்து மனைவி முத்துலட்சுமி, தாய் புஷ்பா ஆகியோருடன் சொந்த ஊருக்கு பஸ்சில் வந்தார். முத்துலட்சுமி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி ஒரு கை பையில் வைத்திருந்தார்.

அவர்கள் ஆலம்பூண்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி மேல்அருங்குணம் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினர். அப்போது அந்த பஸ்சில் 5 பெண்கள் கொண்ட கும்பல் ஒன்று இருந்தது. அந்த கும்பல் நைசாக முத்துலட்சுமி வைத்திருந்த கை பையை பிளேடால் அறுத்து, அதில் இருந்த 3 பவுன் நகையை திருடியது. அந்த பஸ் அடுத்த நிறுத்தத்தில் நின்ற உடன் திருடிய நகையுடன் அந்த கும்பல் இறங்கி சென்று விட்டது.

சிறிது நேரம் கழித்து கைப்பையை பார்த்த முத்துலட்சுமி பை கிழிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பையின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. உடனே அவர் தான் வைத்திருந்த நகையை காணவில்லை என கூச்சலிட்டார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் ஏழுமலை புகார் செய்தார். அதன் பேரில் நகையை திருடி சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News