செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4.56 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-19 14:03 GMT   |   Update On 2021-07-19 14:03 GMT
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக சுகாதாரத்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையில் 111 பேர் உயிரிழந்தனர். 2-வது அலையில் நேற்று முன்தினம் வரை 325 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளதால், அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். சில முகாம்களில் பொதுமக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொள்வதை பார்க்கமுடிகிறது.

இறந்தவர்களில் 70 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும், 119 பேர் 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், 247 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே 3-வது அலை சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரை தாக்கும் என தகவல் வெளியாகி வருவதால் 18 வயது முதல் 25 வயதுள்ள நபர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 272 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 53,539 பேரும், இணை நோய் உள்ளவர்கள் 62,113 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 65,918 பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 948 பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.

பொதுமக்கள் இடையே தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால், ஒதுக்கீடு வரப்பெற்றால் உடனுக்குடன் தடுப்பூசி போட ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News