செய்திகள்
பள்ளிக்குச் சென்ற மாணவர்கள்

பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு

Published On 2020-09-15 10:45 GMT   |   Update On 2020-09-15 10:45 GMT
பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பள்ளிகள் திக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News