செய்திகள்
திருமண தம்பதிகள் (மாதிரிப்படம்)

காதல் திருமணம்: 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் திரும்பிய தம்பதியர் கல்லால் அடித்துக் கொலை

Published On 2019-11-08 09:58 GMT   |   Update On 2019-11-08 09:58 GMT
கர்நாடகாவில் கலப்புத்திருமணம் செய்துவிட்டு 4 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பிய தம்பதியரை கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் லக்காலாகட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மாதர், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்தனர். அந்த வாலிபர் வேறு சாதி என்பதால் பெண்வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு தலைமறைவாயினர். கர்நாடகா மாநிலத்திலயே பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தம்பதியர் 4 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். கடந்த 6-ம் தேதி ஊருக்குள் நுழையும் போதே அவர்களை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News