செய்திகள்
கொற்கையில் அகழாய்வு

கொற்கையில் அகழாய்வு- 7 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

Published On 2021-07-23 03:28 GMT   |   Update On 2021-07-23 03:28 GMT
பழங்கால சங்கு அறுக்கும் தொழிற்சாலை, சோறு வடிக்க பயன்படுத்திய சுடுமண் குழாய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏரல்:

தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் தங்கத்துரை தலைமையிலான குழுவினர், கொற்கையில் 17 குழிகள் அமைத்து அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் பழங்கால சங்கு அறுக்கும் தொழிற்சாலை, சோறு வடிக்க பயன்படுத்திய சுடுமண் குழாய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஏராளமான பழங்கால நாணயங்கள், கடல் சிப்பிகள் போன்றவையும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் கொற்கையில் அகழாய்வின்போது 7 அடுக்கு கொண்ட பழங்கால செங்கல் கட்டுமானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் உருகிய இரும்பு, கண்ணாடி துண்டுகள் போன்றவையும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், கொற்கையில் கண்டறியப்பட்ட 7 அடுக்கு செங்கல் கட்டுமானமானது, இங்கு பழங்கால மக்களின் வாழ்விடம் இருந்ததையும், தொழிற்சாலை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.


Tags:    

Similar News