லைஃப்ஸ்டைல்
ஆலு போஹா

சூப்பரான சிற்றுண்டி ஆலு போஹா

Published On 2020-07-28 10:34 GMT   |   Update On 2020-07-28 10:34 GMT
மாலையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிட அருமையான சிற்றுண்டி ஆலு போஹா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அவல் - ஒரு கப்,
உருளைக்கிழங்கு -  1
கேரட்  - 1
வெங்காயம் - ஒன்று,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம், கேரட், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உருளைகிழங்கு, கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் பிசிறிய அவலை போட்டு (உதிர்த்து போட்டு) கலக்கவும்.

நன்கு சூடானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கினால்…. சூப்பரான ஆலு போஹா தயார்.

குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி தொட்டும் சாப்பிடலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News