ஆட்டோமொபைல்
ஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6

ஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2020-02-22 08:12 GMT   |   Update On 2020-02-22 08:12 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6 விலை ரூ. 64,310 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இது இந்தியாவில் விலை குறைந்த 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

ஹீரோ டெஸ்டினி 125: எல்.எக்ஸ். மற்றும் வி.எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. வி.எக்ஸ். வேரியண்ட் விலை ரூ. 66,800 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு வேரியண்ட்களிலும் ஒரே என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்திறன் மற்றும் எரிபொருள் பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.



புதிய ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக 124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 10.4 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பி.எஸ்.4 என்ஜினை விட 0.2 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும்.

இதுதவிர புதிய டெஸ்டினி பி.எஸ்.6 ஸ்கூட்டர் முந்தைய மாடலை விட 11 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெட்டெட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களை தவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டெக்ஸ்ச்சர் சீட்கள், அலாய் வீல்கள், குரோம் அக்சென்ட்கள், மொபைல் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
Tags:    

Similar News