செய்திகள்
குழந்தை

கோவையில் 2 குழந்தைகள் பலி- தடுப்பூசி போட்ட மேலும் 30 குழந்தைகள் கண்காணிப்பு

Published On 2021-02-19 08:02 GMT   |   Update On 2021-02-19 08:02 GMT
கோவையில் 2 குழந்தைகள் பலியானதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
கோவை:

கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு கிஷாந்த் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

விஜயலட்சுமி நேற்று முன்தினம் தனது குழந்தையை தூக்கிகொண்டு அருகே உள்ள அங்கன்வாடி முகாமுக்கு சென்றார். அங்கு இருந்த செவிலியர் குழந்தைக்கு 2½ மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போட்டார். தடுப்பூசி போட்ட அன்று மாலையே குழந்தை இறந்தது.

இதையடுத்து குழந்தையின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு ஒரு வாரமாக சளி, நிமோனியா காய்ச்சல் இருந்ததாகவும் அந்த பாதிப்பினால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சவுரி பாளையத்தை சேர்ந்த 2½ வயது குழந்தை ஒன்றும் தடுப்பூசி போட்டு கொண்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோவையில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மசக்காளி பாளையம் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டு கொண்ட 3 மாத ஆண் குழந்தை இறந்த தகவல் கிடைத்ததும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றோம்.

அங்கு நடத்திய பிரேத பரிசோதனையில் குழந்தை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. காய்ச்சல் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குழந்தையின் நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையில்லால் இருந்துள்ளது. எனவே குழந்தை இறப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதற்கிடையே மற்றொரு குழந்தை இறந்ததாகவும் தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மாலையே ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம்.

அதில் இறந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டு கொண்டதாக கூறப்படும் சவுரி பாளையத்திற்குட்பட்ட மசக்காளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய முகாம், புலியகுளம் முகாமில் குழந்தைகள் இறப்புக்கு பின்பு தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் தகவல்களை சேகரித்தோம். இதில் சவுரிபாளையம் பகுதிக்குட்பட்ட முகாமில் 12 குழந்தைகளுக்கும், புலியகுளம் முகாமில் 18 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அனைத்து குழந்தைகளும் அவர்களது வீடுகளுக்கே சென்று கண்காணித்தோம்.

இதில் குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த 30 குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் தகவல் கொடுக்கவும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசியையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். தற்போது அந்த 2 முகாம்களிலும் தற்காலிகமாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி வைத்துள்ளோம். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோவையில் தடுப்பூசி போட்டு கொண்டதால் 2 குழந்தைகள் இறந்ததாக வந்த தகவல் தவறு. தடுப்பூசியின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்ய தனி குழு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிக்க தனி கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குழந்தைகள் தடுப்பூசியால் தான் இறந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர் என்றார்.
Tags:    

Similar News