செய்திகள்
கோவிஷீல்டு

கோவிஷீல்டு மருந்து வெளிநாடுகளில் உற்பத்தி- சீரம் நிறுவன அதிபர் அறிவிப்பு

Published On 2021-05-02 08:42 GMT   |   Update On 2021-05-02 08:42 GMT
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் தயாரிக்க சீரம் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் அதிபர் ஆதர்பூனவல்லா லண்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

புனேவில் உள்ள எங்கள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 250 கோடி டோஸ் மருந்து தயாரிக்க முடியும். இதை இன்னும் 6 மாதத்தில் 300 கோடியாக உயர்த்த திட்ட மிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்ல கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் உள்ள எங்கள் கூட்டணி நிறுவனங்களிலும் தயாரிக்க திட்ட மிட்டிருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

எனக்கு இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது. முதல்-அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், எங்களுடைய போட்டியாளர்கள் என பலரும் போன் செய்து மிரட்டுகிறார்கள். எனவே சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News