செய்திகள்
கோப்புப்படம்

டிராக்டர் பேரணி வன்முறை : சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு மும்பை மாணவர் கடிதம்

Published On 2021-01-26 22:51 GMT   |   Update On 2021-01-26 22:51 GMT
டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக மும்பையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் நேற்று குடியரசு தினத்தில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறைகள் இடம்பெற்றதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சட்ட மாணவர் அஷீஷ் ராய், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியில் சில சமூகவிரோத சக்திகள் வன்முறையில் ஈடுபட்டன. பொதுச்சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கப்பட்டது. செங்கோட்டையில் தேசியக்கொடியின் இடத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கொடி காட்டப்பட்டது, நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் குலைப்பதாக அமைந்தது.

இந்த அவமானகரமான நிகழ்வால் ஒட்டுமொத்த நாடும் காயப்பட்டுள்ளது. தேசியக்கொடியுடன், நாட்டின் அரசியல் சாசனமும் அவமதிக்கப்பட்டுள்ளது. இவை, இந்திய குடிமக்களின் உணர்வுகளை பாதிப்பதாக அமைந்தன.

எனவே இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். டெல்லி டிராக்டர் போராட்டத்தில் பங்கேற்ற சமூக விரோதிகள் குறித்து ஒரு சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரித்து அறிந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News