செய்திகள்
டெங்கு காய்ச்சல்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-12-04 10:22 GMT   |   Update On 2019-12-04 10:22 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் மழை சீசன் காரணமாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

காய்ச்சல் பாதிப்பு குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ சங்குமணி கூறும்போது, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 150 பேருக்கு வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு தனி வார்டுகளில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிகளின் உடல் நிலை கவலைப்படும் வகையில் இல்லை. நோயாளிகள் மட்டுமின்றி உறவினர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

டெங்கு நோயை எதிர்கொள்ளும் வகையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மருந்து-மாத்திரைகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தால் நோயின் பாதிப்பை விரைவில் குணப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News