பெண்கள் மருத்துவம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி உட்கார வேண்டும்...

கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி உட்கார வேண்டும்...

Published On 2022-01-27 07:24 GMT   |   Update On 2022-01-27 07:24 GMT
கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும் போது கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும்.
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து விட்டாலே, ஆள் ஆளுக்கு அறிவுரை சொல்ல, தங்கள் அனுபவங்களை கூற பலர் கிளம்பி வருவது உண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு உண்ணுவது, உறங்குவது, உடல் ரீதியாக உறவு கொள்வது வரை அறிவுரை கொடுக்கப்பட்டாலும், உட்காருவது குறித்து எந்த ஒரு அறிவுரையும் வழங்கப்படுவது இல்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை!

கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும் போது கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும். அதை சாதாரண நிலையில் உணர்வது கடினம். கர்ப்பமாக இருக்கும் பொழுது ஏற்படும் பல உணர்வுகளில், இந்த உணர்வை அடையாளம் காணுவதும் கடினம். கர்ப்பிணி பெண்கள் இந்த மாதிரியான சம்மணங்கால் முறையில் உட்கார கூடாது; அது நல்லது அல்ல.

சம்மணங்கால் போடும் பொழுது, கால்களை குறுக்குவதால் வயிற்றில் உண்டாகும் அழுத்தம் அதாவது கருவறையில் உண்டாகும் அழுத்தம், பெண்களின் வயிற்றில் உருவாகி வந்து கொண்டு இருக்கும் குழந்தையின் மீது பட்டு, ஒன்று குழந்தையை கலைந்து போகச் செய்யும்; அல்லது குழந்தை முழுமையான வளர்ச்சியை பெற்று விட்டால், குழந்தையை வெளிக்கொணர செய்யும்.

அதாவது கர்ப்பத்தின் முதன்மை காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை கலைந்து போக செய்யலாம்; ஆனால், கர்ப்பத்தின் இறுதி காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை வெளி உலகிற்கு கொண்டு வர உய்யலாம்; எனவே, சம்மணங்கால் போட்டு உட்காருவதை தவிர்க்க வேண்டும். குழந்தையை வெளியேற்ற இம்முறையை செய்வதாய் இருந்தால், உரிய மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது!

கர்ப்ப காலத்தில் கால்களை நீட்டி உட்காருவதே சிறந்தது. அதே போல் சேரில் கால்களை தொங்க போட்டும் உட்காரலாம். அதிக நேரம் காலை தொங்க போட்டு உட்கார்ந்தால் பாதங்கள் வீங்க ஆரம்பிக்கும். எனவே அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
Tags:    

Similar News