செய்திகள்
மசோதா மீதான விவாததில் பதிலளித்த அமித்ஷா

சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

Published On 2019-08-02 08:41 GMT   |   Update On 2019-08-02 08:52 GMT
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
புதுடெல்லி:

தனி நபர்களை பயங்கரவாதிகளாக பெயர்ப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குவது சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டது.

மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த மசோதா மீதான விவாதம் இன்றும் நடந்தது.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரசை சேர்ந்த ப சிதம்பரம் இன்று பேசினார். அப்போது அவர் மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலளித்து பேசினார். 


 
சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால், சட்டத் திருத்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்பத் தேவையில்லை என மாநிலங்களவை முடிவு செய்தது. 

இதைத்தொடர்ந்து, சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் தொடங்கியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகள் கிடைத்தன. மசோதாவுக்கு எதிராக 42 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
Tags:    

Similar News