வழிபாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் பங்குனி உத்திரத் திருவிழா, கோடை வசந்தத் த

கோடை வசந்த விழாவில் செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளிய மீனாட்சி-சுந்தரேசுவரர்

Published On 2022-03-19 08:41 GMT   |   Update On 2022-03-19 08:41 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் பங்குனி உத்திரத் திருவிழா, கோடை வசந்தத் திருவிழாவாக பத்து நாட்கள் கொண்டாடப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் பங்குனி உத்திரத் திருவிழா, கோடை வசந்தத் திருவிழாவாக பத்து நாட்கள் கொண்டாடப்படும். இவ்விழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை வீதிகளில் வலம் வந்து தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார்.

அங்கு ஊஞ்சல் உற்சவம் நடந்து மீண்டும் கோவிலை வந்தடைவர். திருவிழாவில் கடைசி நாளான பங்குனி உத்திரத்தன்று மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றின் வடகரையில் உள்ள செல்லூர் திருவாப்புடையவார் கோவிலில் எழுந்தருளுவார்கள்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடத்தி, மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சிம்மக்கல் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைவார்.
Tags:    

Similar News