செய்திகள்
பிரதமர் மோடி

எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம் - பிரதமர் மோடி உரை

Published On 2021-04-20 15:42 GMT   |   Update On 2021-04-20 15:42 GMT
கொரோனா 2-வது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா சூழல் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது. கொரோனா 2-ஆவது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முடிறியடிக்க இயலும் என நம்புகிறேன். 

எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம்.கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை ஒரு புயலை போல நாடு முழுவதும் வீசி வருகிறது.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாடுபடுகின்றனர். 

கடந்த வருடம் இருந்த மோசமான சூழல் இந்த வருடம் இல்லை. நாடு மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
Tags:    

Similar News