செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 5-ம் கட்டமாக 240 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2021-10-09 13:24 GMT   |   Update On 2021-10-09 13:24 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 5-ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 5-ம் கட்ட மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமங்களில் 207 இடங்கள் என மொத்தம் 240 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 1,440 பேர் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 80 ஆயிரத்து 93 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போட தகுதி வாய்ந்தவர்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 200 பேரில், முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 97 ஆயிரத்து 170 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 89 ஆயிரத்து 784 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வீட்டிலும் தடுப்பூசி போட தகுதி வாய்ந்தவர்களில், இதுவரை தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு, தவணை காலம் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, நமது பெரம்பலூரை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும், என்றார்.
Tags:    

Similar News