ஆன்மிகம்
காவடி பழனி ஆண்டவர் ஆசிரமம்

காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது

Published On 2021-11-09 05:59 GMT   |   Update On 2021-11-09 05:59 GMT
சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சண்முகநாதர் புறப்பாடு மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் கடந்த 4-ந் தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை லட்சார்ச்சனை, காவடி பழனி ஆண்டவருக்கு 36 முறை சஷ்டி பாராயணம், சோடஷ உபசார பூஜை, தீபாராதனை நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதாபூஜையுடன் நடைதிறப்பு நடக்கிறது. 9 மணிக்கு கந்த சஷ்டி, சத்ரு சம்ஹார ஹோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை நிறைவு பெறும். மதியம் 12 மணிக்கு காவடி பழனி ஆண்டவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடக்கிறது.

மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சண்முகநாதர் புறப்பாடு மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி மயில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு மகாஅபிஷேகம், செந்தூர்வேலன் அலங்காரம், 108 தங்க மலர்களால் அர்ச்சனை, மகா தீபாராதனை, திருப்புகழ் பஜனை நடைபெற உள்ளது.

நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜையுடன், நடைதிறக்கப்படும். காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News