செய்திகள்
அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கார்

நம்பிக்கையின் கார்... சுற்றுச்சூழலை பாதிக்காமல் தீபாவளி கொண்டாட வித்தியாசமான விழிப்புணர்வு

Published On 2020-11-15 03:05 GMT   |   Update On 2020-11-15 03:05 GMT
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதிக்காத விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. இதற்காக தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சுற்றுச்சூலை பாதிக்காத தீபாவளியை கொண்டாடும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கும் முயற்சியாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமைப்பு மேற்கொண்ட விழிப்புணர்வு செயல்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அதாவது, கார் மீது 1000 அகல் விளக்குகளை ஏற்றி வைத்துள்ளனர். அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த காருக்கு, நம்பிக்கையின் கார் என்றும் பெயரிட்டுள்ளனர். 

இதன்மூலம் கொரோனா இருளுக்கு மத்தியில் நம்பிக்கையின் செய்தியை அனுப்பும் முயற்சி என்று அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News