செய்திகள்
ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்த பெண்கள் தபால் நிலையம்

பீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் திறந்து வைத்தார்

Published On 2019-09-22 06:53 GMT   |   Update On 2019-09-22 07:00 GMT
பீகார் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் பெண்கள் தபால் அலுவலகத்தை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த தபால் அலுவலகத்தை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் முழுவதும் மகளிர் மட்டுமே செயல்படுவர். தலைமை அதிகாரி முதல் தபால்களை வினியோகம் செய்பவர்கள் வரை மகளிர் மட்டுமே பணியில் ஈடுபடுவர். மாநிலஅரசு பணி தேர்வாணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை இந்த மகளிர் தபால் நிலையம் செய்யும் என தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் பெண்கள் தபால் நிலையம் புதுடெல்லியில் கடந்த 2013, மார்ச்சில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News