தொழில்நுட்பம்
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

குறைந்த விலையில் 4ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங்

Published On 2020-12-31 07:41 GMT   |   Update On 2020-12-31 07:41 GMT
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சகஜமாகி வருகின்றன. தற்சமயம் பெரும்பாலான சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.



கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சற்றே குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் என அழைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் 4ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 4ஜி எல்டிஇ மட்டும் வழங்கப்பட்டால் இதன் விலை கணிசமாக குறையும் என தெரிகிறது.
Tags:    

Similar News