செய்திகள்
கொரோனா வைரஸ்

உலகில் கொரோனாவால் பாதிக்கப்படும் 2 பேரில் ஒருவர் இந்தியர்

Published On 2021-05-02 09:09 GMT   |   Update On 2021-05-02 09:09 GMT
இந்தியாவில் மட்டும் 2-வது அலை அதிகம் பேரை தொற்றி வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது உலகில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இரண்டில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராக இருக்கிறார்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 3 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது உலகளவில் பல நாடுகளில் நோய் கட்டுக்குள் உள்ளது.

இதனால் நோய் பரவல் வேகமும் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் 2-வது அலை அதிகம் பேரை தொற்றி வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது உலகில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இரண்டில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராக இருக்கிறார்.


இந்தியாவில் மராட்டியம் மாநிலத்தில்தான் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. நேற்று 62 ஆயிரம் பேரை தாக்கி உள்ளது. 3,673 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவின் ஒட்டு மொத்த பாதிப்பின் 14 சதவீதம் மராட்டியத்தில் உள்ளது. 40 ஆயிரம் பேருடன் 2-வது இடத்தில் கர்நாடகாவும், 35 ஆயிரம் பேருடன் 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளன.

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

Tags:    

Similar News