செய்திகள்
யூ டியூப் கேம் மதன்

மதனின் யூடியூப் சேனலில் இருந்து 500 ஆபாச வீடியோக்கள் நீக்கம்

Published On 2021-06-21 10:06 GMT   |   Update On 2021-06-21 10:06 GMT
பப்ஜி மதனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுவர்கள் பலர் மதனின் யூடியூப் சேனலில் புகுந்து விளையாட முற்பட்டுள்ளனர்.
சென்னை:

யூடியூப் சேனல் நடத்தி கோடி கணக்கில் சம்பாதித்த ‘பப்ஜி’ மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மதன், மதன் 18 பிளஸ் என்பது உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்களை நடத்தி வந்த மதன் சிறுவர்- சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுடன் ஆபாசமாக பேசிய ஆடியோ மற்றும் பப்ஜி விளையாட்டுகளுடன் கூடிய வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த வீடியோக்களை நீக்கவும், அந்த யூடியூப் சேனலை முழுமையாக முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் மதனின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்களை போலீசார் நீக்கி உள்ளனர்.

இதற்காக மதன் நடத்திய யூடியூப் சேனல் குறியீட்டு எண்களை பயன்படுத்தி உள்ளனர்.

பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுவர்கள் பலர் மதனின் யூடியூப் சேனலில் புகுந்து விளையாட முற்பட்டுள்ளனர்.

இதுபோன்று யூடியூப் சேனலுக்குள் நுழையும் சிறுவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பப்ஜி விளையாட்டை நிறுத்தி விட்டு ஒழுங்காக படிக்குமாறு போலீசார் யூடியூப் வழியாக அறிவுரை கூறி வருகிறார்கள்.

மதனின் யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களை வழக்குக்கு தேவையான முக்கிய ஆதாரங்களாக சேகரித்துள்ள போலீசார் மதனின் அனைத்து யூடியூப் சேனலையும் முடக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக யூடியூப் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து மதனின் யூடியூப் சேனல்கள் விரைவில் முடக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News