தொழில்நுட்பச் செய்திகள்
வாட்ஸ்ஆப் புதிய அம்சம்

வாட்ஸ்ஆப்பில் வரவுள்ள சூப்பர் அப்டேட்- இனி பயனர்களுக்கு குஷி தான்!

Published On 2022-03-28 10:11 GMT   |   Update On 2022-03-28 10:11 GMT
தற்போது ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் உயர உயர மீடியா ஃபைல்களின் அளவும் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த அம்சம் கொண்டு வரப்படவுள்ளது.
இன்று உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. 

வாட்ஸ்ஆப்பில் வீடியோ, ஆடியோ அழைப்புகள், வாய்ஸ் மெசேஜ்கள், ஸ்டிக்கர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இவற்றுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுகள் ஆகியவற்றையும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப முடியும். ஆனால் 100 எம்.பி அளவிலான ஃபைல்களை மட்டுமே வாட்ஸ்ஆப்பில் தற்போதுஅனுப்பும் வகையில் இருக்கிறது.

இந்நிலையில் இனி 2 ஜிபி வரையிலான ஆவணங்களை அனுப்பும் அம்சத்தை வாட்ஸ்ஆப் சோதனை செய்து வருகிறது. தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டில் வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் 2.22.8.5, 2.22.8.6 மற்றும் 2.22.8.7 ஆகியவற்றுக்கும், ஆண்ட்ராய்டில் பீட்டா வெர்ஷன் 22.7.0.76-க்கும் இந்த அம்சம் தரப்பட்டுள்ளது.

தற்போது ஸ்மார்ட்போன் கேமராக்களின் தரம் உயர உயர மீடியா ஃபைல்களின் அளவும் கூடுவதை கருத்தில் கொண்டு இந்த 2ஜிபி அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.
Tags:    

Similar News