செய்திகள்
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

Published On 2021-06-07 11:29 GMT   |   Update On 2021-06-07 11:29 GMT
பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்திருந்தது.
கொல்கத்தா:

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. 

இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன. 

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.



இந்த நிலையில், மேற்கு வங்காளத்திலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். 

தேர்வு நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மேற்கு வங்காள அரசு அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
Tags:    

Similar News