ஆன்மிகம்
பழனி திருஆவினன்குடி கோவில்

பழனி திருஆவினன்குடி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: யுடியூப், பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

Published On 2020-12-23 04:18 GMT   |   Update On 2020-12-23 04:18 GMT
பழனி திருஆவினன்குடி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை பேஸ்புக், யுடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.15 மணிக்கு மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை, 4.20 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, அக்னி காரிய ஹோமம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து சனீஸ்வரருக்கு அபிஷேகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை நடைபெறும்.

பின்னர் காலை 5.22 மணிக்கு  சனிப்பெயர்ச்சி  மகாதீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.  சனிப்பெயர்ச்சி விழாவை பேஸ்புக், யுடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News