ஆட்டோமொபைல்
கவாசகி டபிள்யூ175

இந்தியாவில் சோதனை செய்யப்படும் கவாசகி டபிள்யூ175

Published On 2020-11-21 10:38 GMT   |   Update On 2020-11-21 10:38 GMT
கவாசகி நிறுவனத்தின் டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.


கவாசகி நிறுவனம் இந்தியாவில் வெளியிட பிரத்யகே ரெட்ரோ-கிளாசிக் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வந்தது. அந்த வரிசையில், தற்சமயம் கவாசகி டபிள்யூ175 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிள் எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலின் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் பல நாடுகளில் டபிள்யூ175 மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அந்த வகையில் இதன் இந்திய வெர்ஷன் அதிக மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. கவாசகி டபிள்யூ175 மாடலில் 177சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த என்ஜின் 13 பிஹெச்பி பவர், 13.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த என்ஜினுடன் மிகுனி விஎம்24 கார்புரேட்டர் வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News