உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 800 குட்டை, நீர்நிலைகளை இணைக்க வேண்டும்-போராட்டக்குழுவினர் வலியுறுத்தல்

Published On 2021-12-06 08:24 GMT   |   Update On 2021-12-06 08:24 GMT
800 குட்டைகளையும் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிராமங்கள் வெகுவாகப் பயனடையும்.
திருப்பூர்:

அத்திக்கடவு-அவிநாசி போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தொரவலூரில்  நடைபெற்றது. பாரதிய கிஷான் சங்க மாவட்டத் தலைவரும், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான வேலுசாமி தலைமை வகித்தார். 

தொரவலூர் சம்பத், பிரபாகரன், சந்திரமூர்த்தி, வேணி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அவிநாசி, பெருந்துறை, தொரவலூர், பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 800 குட்டைகள் கணக்கெடுப்பின்போது விடுபட்டுள்ளது. இந்த 800 குட்டைகளையும் நிரப்பினால்  நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிராமங்கள் வெகுவாகப்பயனடையும். விவசாயமும் தழைக்கும். ஆகவே விடுபட்ட குட்டைகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக விரைவில் தமிழக முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News