ஆன்மிகம்

திருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-25 04:01 GMT   |   Update On 2019-06-25 04:01 GMT
திருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் மற்றும் சாம்புகமூர்த்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒருசில காரணங்களால் தேர்திருவிழா தடைபட்டு வந்தது. இந்த ஆண்டு தேர்திருவிழாவை நடத்த கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதற்காக கடந்த 14-ந் தேதி காப்பு கட்டி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யானை வாகனம், அன்ன வாகனத்தில் அய்யனார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மூலவரான அய்யனார் உற்சவமூர்த்தியாக எழுந்தருளி காட்சி அளித்தார். முன்னதாக சாம்புக மூர்த்தி, வீரப்ப சுவாமிக்கு கிடாவெட்டுதல் நடைபெற்றது. வருகிற 28-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியோடு விழா நிறைவடைகிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேரோட்டம் நடைபெற்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News