உள்ளூர் செய்திகள்
நாடியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

நாடியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-15 09:46 GMT   |   Update On 2022-04-15 09:46 GMT
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.



பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் திருவிழா கடந்த 29-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி அதனைத் தொடர்ந்து 6-ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது. மாலையில் கண்டியன் தெரு மற்றும் முதல்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாலை எடுத்து வரப்பட்டது. 

அதனை தொடர்ந்து தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் மார்க்கெட், வடசேரி முக்கம் பகுதியை கடந்து, பிள்ளையார் கோவில் தெரு வழியாக தபால் நிலையம் வந்து மணிகூண்டு செல்லும் பாதையில் நிலை

கொண்டது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு தீயணைப்பு வண்டி மற்றும் 100&க்கும் மேற்பட்ட போலீ--சார் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை

காண வருகை தந்திருந்தனர். இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விசில் ஊதியபடியும், கும்பலாக கோஷமிட்டபடியும், கடந்த இரண்டாண்டுகளாக வழிபட முடியாத இந்த தேரோட்டத்தினை

மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

தேர் நிலைகொண்டுள்ள இடத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் இதனைப் பெரும் பாக்கியமாக கருதி அந்த ஊழியர்களுக்கான செலவினை அவர்கள் ஏற்-பார்கள் என்பது ஒவ்வொரு ஆண்டும்

நடைபெறும் சம்பிரதாயமாக தொடர்கிறது. 

இதனைத் தொடர்ந்து மறுபடியும் தேர் இழுக்கப்பட்டு ஊர்வலமாக மணிகூண்டு வழியாகத் தேரடி-தெரு வந்து தேரடியில் நிலைகொள்ளும். தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News