செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் திடீர் இடமாற்றம்

Published On 2021-10-17 08:44 GMT   |   Update On 2021-10-17 08:44 GMT
நகை சரிபார்ப்பு துணை கமிஷனர் பொறுப்பு கரூர் மாவட்ட உதவி கமிஷனர் சூரியநாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ், மாவட்ட நகை சரிபார்ப்பு துணை கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் திடீரென அவர்  இடமாற்றம் செய்யப்பட்டார்.

இடமாறுதலாகி செல்லும் உதவி கமிஷனருக்கு அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து பிரிவு உபசார விழா நடத்தினர். புதிய அதிகாரி நியமனம் செய்யப்படாததால், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உதவி கமிஷனர் மேனகாவிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நகை சரிபார்ப்பு துணை கமிஷனர் பொறுப்பு கரூர் மாவட்ட உதவி கமிஷனர் சூரியநாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News