செய்திகள்
பாஜக மாநில தலைவர் எல் முருகன்

வருகிற 17ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும்- எல்.முருகன்

Published On 2020-11-12 08:28 GMT   |   Update On 2020-11-12 08:28 GMT
வருகிற 17-ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கூறினார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நவம்பர் 17-ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். வேல் யாத்திரை டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும்.

தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.  சாலை, கோவில் வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வதை ஏற்க முடியாது.

பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் சொன்னது சரிதான். வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிப்பதால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக கே.டி.ராகவன் கூறியிருந்தார்.

அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு. சாலையில் செல்பவர்களைக்கூட முன்னெச்சரிக்கையாக கைது செய்வது ஏன்? என்றும் தேர்தல் வரக்கூடிய தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும் என்றும்  எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

வேல் யாத்திரை மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News