ஆன்மிகம்
அன்னலிங்கத்துடன் நந்தி ஒன்றை தலையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2021-10-21 05:45 GMT   |   Update On 2021-10-21 05:45 GMT
சாதத்தால் ஒரு சிறிய சிவலிங்கம் தயார் செய்யப்பட்டு கோவில் உள்ளே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிறிய அன்னலிங்கத்துடன் நந்தி ஒன்றை தலையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது. 150 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தை மூலவர் சிவலிங்கத்தின் கீழிருந்து மேல் வரை முழுமையாக மூடி மறைக்கப்பட்டு, அன்னலிங்க அலங்காரம் செய்யப்பட்டது.

மீதமுள்ள சாதத்தால் ஒரு சிறிய சிவலிங்கம் தயார் செய்யப்பட்டு கோவில் உள்ளே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிறிய அன்னலிங்கத்துடன் நந்தி ஒன்றை தலையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதன் பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட அன்னத்தை பிரசாதமாக வழங்கினர்.
Tags:    

Similar News